இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக 4.14 லட்சம் பேருக்கு கொரோனா; 3,915 பேர் உயிரிழப்பு

0 3202
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக 4.14 லட்சம் பேருக்கு கொரோனா; 3,915 பேர் உயிரிழப்பு

ந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவாக 4 லட்சத்து 14 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதேபோல், ஒரே நாளில் 3 ஆயிரத்து 915 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும், 3 லட்சத்து 31 ஆயிரத்து 507 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் 36 லட்சத்து 45 ஆயிரத்து 164 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் ஒரே நாளில் 62,194 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

மேலும், இதுவரை 16 கோடியே 49 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments