ஆந்திராவில் மனைவியின் மடியில் உயிர் விட்ட கணவன்..! கொரோனாவில் இருந்து குணமான நிலையில் கணவனுக்கு நடந்த துயரம்

0 11418
ஆந்திராவில் மனைவியின் மடியில் உயிர் விட்ட கணவன்..! கொரோனாவில் இருந்து குணமான நிலையில் கணவனுக்கு நடந்த துயரம்

ந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தபோது பிளாட்பாரத்திலேயே மனைவி மடியில் கணவர் உயிர் பிரிந்த சம்பவம் பார்ப்பவர் நெஞ்சில் சோகத்தை ஏற்படுத்தியது.

குடிபள்ளே மண்டலம் மிட்டூரை சேர்ந்த சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பெங்களூரில் குடிபெயர்ந்து வியாபாரம் செய்து வந்தனர். அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் 15 நாட்களுக்கு முன்பு இருவரும் குப்பம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தனர்.

பின்னர் கொரோனா குணமான நிலையில் அந்த தம்பதியினர் பெங்களூரு செல்வதற்காக குப்பம் ரயில் நிலையம் வந்த போது சந்திரசேகருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மனைவியின் மடியில் சாய்ந்த படி உயிரிழந்தார்.

கொரோனாவில் இருந்து மீண்ட தம்பதியினர் பெங்களூர் சென்று மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப நினைக்கையில் இயற்கையின் திருவிளையாடல் அவர்களை மகிழ்ச்சிக்கு பதில் சோகத்தில் தள்ளியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments