சேற்றில் சிக்கிய சிறுவன்... 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு

0 10107
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே கிணற்றில் விழுந்த சிறுவன் சேற்றில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ராமநாதபுரம்  மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே கிணற்றில் விழுந்த சிறுவன் சேற்றில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

ராமநாதபுரம் மாவட்டம் மல்லல் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் 13 வயது மகனான சுகனேஷ்,நண்பர்களுடன் இங்குள்ள கண்மாய் அருகே உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளான்.

தொடர் மழை காரணமாக கிணற்றைச் சுற்றியுள்ள சிமெண்ட் தரை, திடீரென இடிந்துள்ளது.இதனால் உருவான பள்ளத்தில், சிறுவன் சுகனேஷ் எதிர்பாராதவிதமாக தடுமாறி விழுந்து சேற்றில் சிக்கிக் கொண்டான்.

தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், சேற்றில் சிக்கிய சிறுவனை மீட்கப் போராடினர். இருப்பினும் 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதிகாலை இரண்டரை மணி அளவில் அச்சிறுவனை சடலமாகவே மீட்க முடிந்தது. பின்னர் சிறுவனின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments