கொரோனா 2வது அலையில் அதிர்ச்சி தகவல்.. அறிகுறியே இல்லாமல் இளம் வயதினரை தாக்கும் ஹேப்பி ஹைப்போக்சியா நோய்

0 25263
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா 2வது அலையில் அறிகுறியே இல்லாமல் இளம் வயதினரிடம் ஹேப்பி ஹைப்போக்சியா என்ற நோய் தாக்குதல் அதிகரித்து வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா 2வது அலையில் அறிகுறியே இல்லாமல் இளம் வயதினரிடம் ஹேப்பி ஹைப்போக்சியா என்ற நோய் தாக்குதல் அதிகரித்து வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கொரோனாவின் முதல் அலையில் காய்ச்சல், இருமல் , மயக்கம் வருதல், வாசனை மற்றும் சுவை இழப்பு போன்ற பிற அறிகுறிகளும் தென்பட்டன.

ஆனால் கொரோனா 2வது அலையில் முதல் அலையில் காணப்பட்டது போல் அல்லாமல், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து போவது அதிகரித்து காணப்படுகிறது.  இதனால், நாட்டில் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சூழல் காணப்படுகிறது. இவற்றில் இளம் வயதினரே அதிகம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி அவர்களிடம் லேசான பாதிப்புகள் அல்லது அறிகுறிகளற்ற நிலையே காணப்படுகின்றன. 

இந்த புதுவகை வியாதிக்கு ஹேப்பி ஹைப்போக்சியா என பெயரிட்டு உள்ளனர். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து இருப்பது ஹைப்போக்சியா எனப்படுகிறது. இந்த வகை வியாதி  உள்ள எந்தவொரு நபருக்கும் சுவாச கோளாறு அறிகுறிகள் வெளிப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments