கேரளாவில் நாளை முதல் மே 16 வரை முழு ஊரடங்கு..!

0 3233
கேரளாவில் நாளை முதல் மே 16 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் நாளை முதல் மே 16 வரை முழு ஊரடங்கு  அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

திருமணங்களில் 20 பேருக்கு மேல் திரளக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மே 8 ம் தேதி காலை 6 மணி முதல் கேரளா முழுவதும் முழு அடைப்பில் இருக்கும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அரசு அலுவலகங்கள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் இயங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ரேசன் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. காய்கறி  மளிகைக்கடைகள் உணவகங்கள்,பால் , இறைச்சிக் கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் அடைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments