ராஜஸ்தானில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு..

0 2226
ராஜஸ்தானில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

ராஜஸ்தானில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை அமலில் உள்ள ஊரடங்கின்போது கடைகள் யாவும் அடைக்கப்பட்டிருக்கும். மளிகை காய்கறி கடைகள் சில மணி நேரம் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும். அத்தியாவசியப் பணிகள், சேவைகள் தவிர அனைத்து விதமான செயல்பாடுகளும் முடக்கப்படுகின்றன.

இம்மாத இறுதி வரை திருமண சடங்குகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவைத் தடுக்க ராஜஸ்தான் அமைச்சர்கள் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு நேற்று தன் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதில் கொரோனாவைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் ஒன்றுதான் வழி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அமைச்சரவை ஆலோசனைக்குப் பிறகு முதலமைச்சர் அசோக் கெலாட் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments