தமிழகத்துக்கு ஆக்சிஜன் வழங்கலை உறுதிசெய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

0 1739
தமிழகத்துக்குத் தடையில்லா ஆக்சிஜன் வழங்குவதை இன்றைக்குள் உறுதி செய்ய மத்திய அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்துக்குத் தடையில்லா ஆக்சிஜன் வழங்குவதை இன்றைக்குள் உறுதி செய்ய மத்திய அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா சூழலில் மருந்துகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் காணொலியில் ஆஜராகிச் செங்கல்பட்டு மருத்துவமனையில் இறந்த 13 பேரும் கொரோனா தொற்று இல்லாத நோயாளிகள் என்றும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் உமாநாத், ஆக்சிஜன் சிலிண்டர் கையிருப்பு இன்று வரை மட்டுமே உள்ளதாகவும், நாளை மிகவும் மோசமான சூழ்நிலையை எட்டிவிடும் என்றும் தெரிவித்தார்.

ஆக்சிஜன் ஒதுக்குவதில் எந்தக் குறைபாடும் இல்லை என்றும், உத்தரவுக்குக் காத்திருக்காமல் ஆக்சிஜனை அனுப்ப நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். ரெம்டிசிவிர், ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசுக்கு முறையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமென வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார்.

தமிழகத்துக்குத் தேவையான அளவு ஆக்சிஜனை இன்றைக்குள் மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர். மதுரை, கோவை நகரங்களில் டி.ஆர்.டி.ஓ. மூலம் போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசிக்கவும் அறிவுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments