தமிழக முதலமைச்சராக இன்று பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின்..

0 3893
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று காலை பதவியேற்கிறார். அவருடன் 33 அமைச்சர்களும் இன்று பதவியேற்க உள்ளனர்.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று காலை பதவியேற்கிறார். அவருடன் 33 அமைச்சர்களும் இன்று பதவியேற்க உள்ளனர்.

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.125 இடங்களிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சிகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின், 133 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் ஸ்டாலினை ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

இன்று காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையின் திறந்த புல்வெளியில் குறைந்த விருந்தினர்களுடன் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. முதலமைச்சராகப் பதவியேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் 33 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர் .

கொரோனா நோய் பரவல் காரணமாக, பதவியேற்பு விழா, எளிமையாக நடத்தப்பட உள்ளது. அழைப்பிதழுக்கு ஒருவர் மட்டும் அனுமதிக்கப்படுவர் என்றும் முதலமைச்சருடன் பதவியேற்க உள்ள, அமைச்சர்கள் குடும்பத்திலிருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

பதவி ஏற்பு விழா முடிந்ததும், கலைஞர் நினைவிடம் சென்று ஸ்டாலின் மரியாதை செலுத்த இருக்கிறார். பின்னர் தலைமைச் செயலகம் சென்று 3 முக்கிய கோப்புகளில் ஸ்டாலின் கையொப்பமிட இருப்பதாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments