மகேந்திரன் ஒரு துரோகி... ஓடும் கோழைகளைக் கண்டு கவலைப்படுவது இல்லை: கமல்ஹாசன் ஆவேசம்

0 6686
மகேந்திரன் ஒரு துரோகி... ஓடும் கோழைகளைக் கண்டு கவலைப்படுவது இல்லை: கமல்ஹாசன் ஆவேசம்

க்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியுள்ள மகேந்திரன் ஒரு துரோகி என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் தோல்விக்குப்பின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மகேந்திரன் உள்ளிட்டோர் விலகியது குறித்து, மாலையில் அறிக்கை வெளியிட்டு உள்ள கமல்ஹாசன், தேர்தல் களத்தில் எதிரிகளோடு, துரோகிகளும் கலந்து இருந்தார்கள் என குறிப்பிட்டு உள்ளார்.

களை எடுக்க வேண்டிய பட்டியலில் முதல் நபராக இருந்தவர், மகேந்திரன் என அவர் தெரிவித்துள்ளார். மகேந்திரனை நீக்க முடிவு செய்ததை தெரிந்து கொண்டு, புத்திசாலித்தனமாக அவரே, கட்சியில் வெளியேறி விட்டதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தோல்வியின்போது, கூடாரத்தை பிய்த்துக் கொண்டு ஓடும் கோழைகளைப் பற்றி ஒருபோதும் கவலைப்படுவது கிடையாது என தமது அறிக்கையில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments