கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 37 ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு

0 3062
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 37 ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரயில்களில் பயணிகள் வரத்து குறைந்துள்ளதால் 37 ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் பல்லவன், வைகை, தேஜஸ் உள்ளிட்ட முக்கிய ரயில்கள் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுவதாகவும், சென்ட்ரலில் இருந்து புறப்படும் ஏற்காடு, சேரன் உள்ளிட்ட முக்கிய ரயில்கள் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுவதாகவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் கொரோனா பரவல் காரணமாக குறைந்த அளவிலான முன்பதிவு கவுண்டர்கள் மட்டுமே செயல்படும் என்பதால் பயணிகள் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments