மும்பையில் இருந்து 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தடைந்தன..!

0 1473
மும்பையில் இருந்து 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தடைந்தன..!

மும்பையில் இருந்து 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மத்திய மருந்து தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

இந்நிலையில் மும்பையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இருந்து அனைத்து மாவட்டத்திற்குக்கும் அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெறிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments