”69 சதவீத இடஒதுக்கீட்டைக் காப்பாற்ற தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்” -அதிமுக வலியுறுத்தல்

0 1935
”69 சதவீத இடஒதுக்கீட்டைக் காப்பாற்ற தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்” -அதிமுக வலியுறுத்தல்

மிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டைக் காப்பாற்ற தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டுமென அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், மராத்தா சமூகத்தினருக்கான உள் ஒதுக்கீட்டை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ரத்து செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் 69% இடஒதுக்கீடு என்னவாகுமோ என்ற கவலையும் அச்சமும் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக மக்களின் உயர்வுக்கும் சமூக நீதி பாதுகாப்புக்கும் அடிப்படையாக விளங்கக்கூடிய 69% இடஒதுக்கீடு முறையை பாதுகாக்க தேவையான சட்டரீதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டுமெனவும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் வலியுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments