அமைச்சகங்கள், துறைகளின் பெயர் மாற்றம் குறித்தும், முதலமைச்சராகப் பொறுபேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் அறிக்கை

0 5528
அமைச்சகங்கள், துறைகளின் பெயர் மாற்றம் குறித்தும், முதலமைச்சராகப் பொறுபேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் அறிக்கை

மிழ்நாட்டில் 10 அமைச்சகங்களின் பெயர்களை மாற்றி, முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் செயல் படுவதற்காக நீர்வளத்துறை என்ற தனி அமைச்சகம் இயங்கும் என தெரிவித்துள்ளார். வேளாண்மைத் துறை இனி‘வேளாண்மை - உழவர் நலத்துறை’ என்றும், சுற்றுச்சூழல் துறை - ‘சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை’என்றும் பெயர் மாற்றம் செய்யப்படும்.

மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு, ‘மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை’ என்று பெயர் சூட்டப்படுகிறது. இதேபோல, மீன்வளத்துறைக்கு ‘மீன்வளம் - மீனவர் நலத் துறை’ என்றும் பெயரிடப்படுகிறது. செய்தி - மக்கள் தொடர்புத் துறை இனி, ‘செய்தித் துறை’ என அழைக்கப்படும்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்கிற துறை வெளிநாடு வாழ் தமிழர் நலன் என்று பெயர் மாற்றம் அடைகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments