சத்தீஸ்கரில் ஓமியோபதி மருந்தை உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

0 8267

த்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஓமியோபதி மருந்தை உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். 5 பேருக்கு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆல்கஹால் கலந்த ஓமியோபதி மருந்தை உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்ததாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்தக் குடும்பத்தில் மேலும் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்களுக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 பேர் இறப்புக்கான பிற காரணங்கள் குறித்து அறிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சத்தீஸ்கர் முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments