கொரோனா நோயாளிகளிடம் தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த அரசு முன்வர வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

0 1165

கொரோனா நோயாளிகளிடம் தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதை அரசு முறைப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், முதலமைச்சர் மற்றும் பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீட்டு திட்டங்களை தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்துவதில்லை என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளிடம் அதிக பணம் பெறுவது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளதாகவும், இதனை அரசு முறைப்படுத்தவேண்டுமெனவும் உத்தரவிட்டு வழக்கை 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments