விவசாயி அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யாது, புகார் அளித்தவரை மிரட்டிய காவல் உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

0 1114

புகார் மீது வழக்குப்பதிவு செய்யாமல், புகார் அளித்தவரை மிரட்டிய காவல் உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

2013ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த விவசாயி தங்கராஜை மூன்று பேர் கொண்ட கும்பல் தாக்கியது. இது குறித்துப் புகார் அளித்தும் வடமதுரை காவல் உதவி ஆய்வாளர் பிரேம்சந்திரன் வழக்குப் பதிய மறுத்துள்ளார். 

இந்தப் புகாரை விசாரித்த ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன், தங்கராஜுக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். புகார் மீது வழக்குப்பதிவு செய்யாத உதவி ஆய்வாளர் பிரேம்சந்திரனுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தமிழக உள்துறைச் செயலருக்குப் பரிந்துரைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments