தமிழகத்துக்கு இன்று மாலை 1 இலட்சம் டோஸ் தடுப்பு மருந்தை அனுப்புகிறது சீரம் நிறுவனம்

0 1516

மும்பையில் இருந்து சென்னைக்கு இன்று மாலை ஒரு லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து கொண்டு வரப்படுகிறது.

தமிழகத்துக்கு இதுவரை 60 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்தும், 10 லட்சத்து 82 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்தும் கிடைத்துள்ளன.

இன்று மும்பையில் இருந்து சீரம் நிறுவனம் மேலும் ஒரு லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளை விமானத்தில் அனுப்பி வைக்கிறது.

இந்த மருந்து இன்று மாலை சென்னைக்கு வந்து சேரும். இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 5 லட்சத்து ஐம்பதாயிரம் டோஸ் தடுப்பு மருந்து கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments