மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

0 1009

தமிழகத்தின் தென்மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

மே 8, 9 ஆகிய நாட்களில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments