தமிழகத்தில் முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் - அன்புமணி

0 3799

மிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க முதற்கட்டமாக அடுத்த 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் எனப் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 311 பேர் என்றும், சோதனை செய்யாமல் கொரோனா தொற்றுடன் நடமாடிக் கொண்டிருப்போரின் எண்ணிக்கை இன்னும் ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரே வழி முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது தான் என்றும், அதன் மூலம் கொரோனா பரவல் சங்கிலியை அறுத்தெறிய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments