செப்டம்பரில் மட்டுமே இனி கூகுள் அலுவலகங்கள் திறக்கப்படும் : 20 சதவிகித ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுவர் - கூகுள் நிறுவனம்

0 5225

ந்த ஆண்டின் இறுதியில் தங்களது அலுவலகங்கள் திறக்கப்பட்டாலும் 20 சதவிகித ஊழியர்கள் தொடர்ந்து வீடுகளில் இருந்தே பணியாற்றுவார்கள் என கூகுள் தெரிவித்துள்ளது.

60 சதவிகித பணியாளர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் அலுவலகங்களுக்கு வந்தும் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். எஞ்சிய 2 நாட்கள் தங்கள் விருப்பம் போல் அவர்கள் பணியாற்றலாம். இவர்களை தவிர 20 சதவிகித பணியாளர்கள் தங்களது பணியிடங்களை கூகுளின் வேறு இடங்களுக்கு மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை கூகுள் பணியாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் அதன் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். வரும் செப்டம்பர் வரை கூகுளின் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ஊழியர்களும் தொடர்ந்து வீடுகளில் இருந்தே பணியாற்றுவார்கள் என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments