ஆட்டோகிராப் படத்தில் நடித்த பாடகர் கோமகன் கொரோனாவால் உயிரிழப்பு

0 6118

கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த பாடகர் கோமகன் காலமானார்.

ஆட்டோகிராஃப் படத்தில் இடம்பெற்ற ”ஒவ்வொரு பூக்களுமே” பாடல் மூலம் பிரபலமடைந்தவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான பாடகர் கோமகன்.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரு வாரங்களாக சென்னை ஐசிஎஃப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவர் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். மேடை இசைக் கலைஞராகவும் புகழ்பெற்ற பாடகர் கோமகன் கலைமாமணி விருது பெற்றவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments