தொடர்ந்து மூன்றாவது நாளாக பெட்ரோல் - டீசல் விலை உயர்வு

0 5746

பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்த்தியுள்ளன.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் உயர்த்தப்பட்டு 92 ரூபாய் 90 காசுகளாக உள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 26 காசுகள் உயர்த்தப்பட்டு 86 ரூபாய் 35 காசுகளாக உள்ளது. பெட்ரோல் விலையில் 60 விழுக்காடும், டீசல் விலையில் 54 விழுக்காடும் மத்திய மாநில அரசுகளின் வரியாக உள்ளது.

இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 32 ரூபாய் 90 காசுகளும், டீசல் விலையில் 31 ரூபாய் 80 காசுகளும் மத்திய அரசின் உற்பத்தி வரியாகும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments