காய்கறிக் கூடைகளை எட்டி உதைத்த காவல்துறை அதிகாரி... கடைகளை மூடச் சொல்லி சந்தையில் புகுந்து அட்டகாசம்

0 57225

பஞ்சாபில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் காய்கறிக் கூடைகளை காலால் எட்டி உதைத்த போலீஸ் அதிகாரி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சண்டிகரில் உள்ள சராய் சாலையில் ரோந்து வந்த காவல்துறை அதிகாரியான நவ்தீப் சிங், காய்கறி கடைகளை மூட உத்தரவிட்டதுடன் வாகனத்தில் இருந்து இறங்கி காய்கறி கூடைகளை எட்டி உதைத்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகின .

இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரின் இத்தகைய அநாவசிய அதிகார அத்துமீறல்கள் தேவையற்றவை என்று மேலதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments