சென்னையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டுமே மக்கள் அமர்ந்து பயணம் செய்ய அனுமதி

0 1404

சென்னையில் மாநகர பேருந்துகள் இன்று முதல் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கும் என்று  போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை அடுத்து, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டுமே மக்கள் அமர்ந்து பயணித்திட அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதே போல மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணம் செய்திட அனுமதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பயணிகள் உரிய முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியினைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments