வீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?

0 13766

கொரோனா நோய்த்தொற்று லேசாக உள்ள நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறும் நிலையில், அதற்கான திருத்தப்பட்ட புதிய வழிகாட்டல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

வீட்டில் தேவையான மருந்துகள் போன்றவை மருத்துவர் அல்லது மருத்துவமனை மூலம் கொடுக்கப்பட வேண்டும். அந்த மருத்துவமனையுடன் நோய்க்கு சிகிச்சை பெறுபவர் தொடர்பில் இருக்க வேண்டும். 60 வயதுடைய முதியவர்கள் மருத்துவரின் உடல் பரிசோதனைக்குப் பிறகே வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயநோய்கள், நுரையீரல், மண்ணீரல் போன்ற பாதிப்புகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட வேண்டும். தினமும் இரண்டு முறை வெந்நீரால் வாய்க் கொப்பளிக்க வேண்டும். பாரசிட்டமால் போன்ற மாத்திரைகளால் காய்ச்சல் கட்டுக்குள் வராவிட்டால், இதர மருந்துகளை கண்காணிப்பு மருத்துவர் பரிந்துரை செய்ய வேண்டும்.

Ivermectin -200 mcg மாத்திரைகளை வெறும் வயிற்றில் ஒருநாளைக்கு ஒன்றுவீதம் 3 முதல்5 நாட்களுக்கு எடுத்துக் கொள்வதை பரிசீலிக்கலாம். பத்து நாட்களுக்குப் பிறகு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட நபர்கள் கடந்த 3 நாட்களில் காய்ச்சல் இல்லாமல் இருந்தால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக கருதலாம் என்பது போன்ற விளக்கங்கள் அந்த வழிகாட்டல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments