புதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி

0 5427

புதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி தலைமையிலான புதிய அரசு, நாளை பதவியேற்க உள்ளது.

என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஒப்புதல் கடிதத்தை, கடந்த 3ஆம் தேதி, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசையிடம் வழங்கிய ரெங்கசாமி, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

துணை நிலை ஆளுநரும், ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயபால், துணை நிலை ஆளுநரை சந்தித்து, பதவியேற்பு விழா தேதி தொடர்பான கடித்தத்தை வழங்கினார்.

இதன்படி, ரெங்கசாமி தலைமையிலான கூட்டணி அரசு, நாளை பிற்பகல் 1.20 மணியளவில் பதவியேற்கிறது. புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடல் அருகே பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments