தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்

0 14632

தமிழ்நாட்டில், ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன், மேலும் பல புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக் கடைகள், இறைச்சி கடைகள், தேநீர் கடைகள், 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். உணவங்கள் நீங்கலாக, மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வருகின்றன. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், 50 சதவிகித பணியாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பயணியர் இரயில், மெட்ரோ ரயில், அரசு மற்றும் தனியார் பேருந்து, வாடகை டாக்சி ஆகியவற்றில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து பயணிக்கலாம். மளிகை கடைகள், பலசரக்கு கடைகள், காய்கறிகள், பழங்கள் விற்பனை கடைகள், டீக்கடைகள் மட்டும், காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.

மருந்தகங்கள், பால் விநியோக கடைகள் தொடர்ந்து செயல்படலாம். அனைத்து உணவகங்களிலும், பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும். உள் அரங்கங்கள், மற்றும் திறந்த வெளிகளில், அரசியல், சமுதாயம், விளையாட்டு, பொழுதுபோக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள், விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்குகள், ஊர்வலங்களில், 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சலூன்கள், பியூட்டி பார்லர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இறைச்சி, மீன் விற்பனை கடைகள், காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments