சென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேருக்கு ஆக்சிஜன் செலுத்த வசதியுடன் ஆம்புலன்ஸ் ஏற்பாடு..!

0 66375
சென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேருக்கு ஆக்சிஜன் செலுத்த வசதியுடன் ஆம்புலன்ஸ் ஏற்பாடு..!

சென்னை மாநகரில் கொரோனா நோயாளிகளுக்கு முதலுதவி அளிக்கும் வகையில், அரசு மருத்துவமனைகளின் நுழைவு வாயிலில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கும் புதிய சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

இதற்காக, தனியார் பள்ளி வாகனங்கள், தற்காலிக ஆம்புலன்ஸ் ஆக மாற்றப்பட்டு உள்ளன. ஜெயின் நிறுவனமும், சென்னை மாநகராட்சியும் கூட்டாக இணைந்து, அறிமுகப்படுத்தி உள்ள இந்த ஆம்புலன்ஸ் சேவை, முதற்கட்டமாக சென்னை மாநகரில் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை உள்பட 4 அரசு மருத்துவ மனைகளில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த வாகனத்தில் ஒரே நேரத்தில் 6 பேருக்கு ஆச்ஸிஜன் கொடுக்க முடியும் என விளக்கம் அளித்த ஜெயின் அமைப்பு, அடுத்த கட்டமாக, மாநிலம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனை வாயில்களிலும் ஆக்சிஜன் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும் என அறிவித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments