கடைசி நேரத்தில் காலை வாரிய புரோகிதர்.... திருமண வீட்டாருக்கு கைகொடுத்த டெக்னாலஜி..!

0 7257
கடைசி நேரத்தில் காலை வாரிய புரோகிதர்.... திருமண வீட்டாருக்கு கைகொடுத்த டெக்னாலஜி..!

தெலுங்கானா அருகே, புரோகிதர் வீடியோ காலில் மந்திரம் ஓத மணமக்கள் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

உற்றார், உறவினர் புடைசூழ, நடைப்பெற்று கொண்டிருந்த திருமணங்கள் கொரோனா தொற்று காரணமாக , நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்து, காதோடு காதோடு வைத்தார் போல நடைப்பெற்று வருகின்றன. அந்த வகையில் தெலுங்கானாவில் வித்தியாசமான முறையில் ஒரு திருமணம் நடைப்பெற்றுள்ளது,.

தெலுங்கானவில், மெதக் மாவட்டத்தில் உள்ள சோமாலி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராம். இவரது மகள் மஞ்சுளா. இவருக்கும் அதேப்பகுதியில் உள்ள பீமலா கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவருக்கும், பீமாலாவில் உள்ள மணமகனின் வீட்டில் திருமணம் நடத்த திட்டமிட்டிருந்தனர்,.

கொரோனா பரவல் காரணமாக, பல திருமணங்கள் தள்ளிப்போகின்றது. ஆனால் அதனை விரும்பாத இவர்கள், குறிப்பிட்ட முகூர்தத்தில் திருமணத்தை நடத்தியே ஆகவேண்டும் என்ற முடிவில் இருந்தனர்,.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பீமலா கிராமத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்,. இதனை கேள்விப்பட்டு திருமணத்தை நடத்தி வைக்க ஒப்பு கொண்டிருந்த புரோகிதர் பதறிப்போனார். மேலும் கொரோனாவிற்கு பயந்து பீமலா கிராமத்திற்கு வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது,.

வர வேண்டிய புரோகிதர், LAST MINUTE இல் காலை வாரியதால் திருமண வீட்டார் செய்வதறியாது திகைத்தனர்,.

இந்த நிலையில் மூகூர்த்த நேரம் முடிய போவதால் சட்டுபுட்டென்று கூடி பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்,. அதன்படி புரோகிதருக்கு டெக்னாலஜிஸ் அத்துப்படி என்பதால், வீடியோ காலில் மந்திர ஓதி திருமணத்தை நடத்த ஒப்புக்கொண்டார்,.

தனது வீட்டில் அமர்ந்தபடி , புரோகிதர் வீடியோ காலில் மந்திரம் ஓத மஞ்சுளா,மோகனின் திருமணம் சிறப்பாக நடைப்பெற்றது. தற்போது இந்த திருமணம் குறித்தான செய்தி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments