தண்டவாளத்தில் சிக்க இருந்த பெண்... நொடிப்பொழுதில் காப்பாற்றிய ரயில்வே காவலர்..!

0 3739
தண்டவாளத்தில் சிக்க இருந்த பெண்... நொடிப்பொழுதில் காப்பாற்றிய ரயில்வே காவலர்..!

ந்திர மாநிலம் பாகாலாவில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்று விபத்தில் சிக்க முயன்ற பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் நொடிப்பொழுதில் இழுத்துக் காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருப்பதி ரயில் நிலையத்தில் இறங்க வேண்டிய ஒரு தம்பதியினர் தூக்கத்தின் காரணமாக அங்கு இறங்கத் தவறியதாக கூறப்படுகிறது. அடுத்த நிலையத்தில் நிறுத்தம் இல்லாததால் ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்த நிலையில், முன்னதாக கணவர் இறங்கி விட்டார்.

இதையடுத்து மனைவி இறங்கும் போது கால் தவறி கீழே விழுந்த நிலையில், அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே காவலர் சதீஷ் உடனடியாக அவரை வெளியே இழுத்து ரயிலுக்கு அடியில் சிக்காமல் காப்பாற்றினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments