மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக நியமித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0 3373
மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக நியமித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மிழ்நாட்டின் முதலமைச்சராக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நியமித்து, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக சட்டப்பேரவை திமுக கட்சித் தலைவராக, அக்கட்சி எம்.எல்.ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின், ஆளுநரை சந்தித்து, ஆட்சியமைக்க, முறைப்படி உரிமை கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஏற்றுக் கொண்டதாக கூறியிருக்கும் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சராக மு.க.ஸ்டாலினை நியமிப்பதாக, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதன்படி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறும் நிகழ்வில், முதலமைச்சராக மு.க.ஸ்டாலினும், அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்க, தமிழ்நாடு ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments