சென்னையில் 20-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் கொரோனா மையமாக அமைக்க ஏற்பாடு..!

0 1813
சென்னையில் 20-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் கொரோனா மையமாக அமைக்க ஏற்பாடு..!

சென்னையில் 20-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் கொரோனா மையமாக மாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.

கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. இதனால் சென்னை மற்றும் அதை ஒட்டிய புறநகர் பகுதிகளில் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் சிகிச்சை மையங்கள் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

தற்போது உயர் கல்வி நிறுவனங்கள் உட்பட 10 கல்லூரிகள் கொரோனா சிகிச்சை மையமாக செயல்படுவதாகவும்,20-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் சிகிச்சை மையமாக மாற்ற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவற்றில் முதல்கட்டமாக 5 ஆயிரம் படுக்கைகளை அமைக்க உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments