"கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது" -மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை

0 2444
"கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது" -மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலை வருவதை தவிர்க்க முடியாது என்று மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன் எச்சரித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 3வது அலை எப்போது தாக்கும் என்பது தெரியவில்லை என்றார். எனினும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தற்போது உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ்க்கு எதிராக, தடுப்பூசிகள் நல்ல பலனளிப்பதாக அவர் கூறினார். மேலும் பல உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்கள் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் உருவாகி வேகமாக பரவும் என்றும் அவர் எச்சரித்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments