நாளை முதல் நண்பகலுக்கு பிறகு ஊரடங்கு அமலுக்கு வருவதால் டாஸ்மாக் செயல்படும் நேரம் மாற்றம்

0 8888
நண்பகலுக்கு பிறகு ஊரடங்கு அமலுக்கு வருவதால் டாஸ்மாக் செயல்படும் நேரம் மாற்றம்

மிழ்நாட்டில், டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு நேரம் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில், நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை, மதுக்கடைகள் இயங்கி வந்தன. வியாழக்கிழமை முதல், புதிய கட்டுப்பாடுகள் அமலாவதால், மதுக்கடைகளின் திறப்பு நேரமும் மாற்றப்பட்டுள்ளது.

இதன்படி, காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. 9 மணி நேரம் இயங்கி வந்த மதுக்கடைகளின் பணி நேரம் 4 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

மதுவாங்க வருவோர், கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், தனிநபர் இடைவெளியுடன் வரிசையில் நின்று மதுவை வாங்க வேண்டும் என்றும், டாஸ்மாக் அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments