அதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..!

0 1909
அதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..!

மிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் தேவையான படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளதா என ஆய்வு நடைபெற்று வருகிறது.

ஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியட் கோவிந்த ராவ் தஞ்சையில் 50% சதவீத படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஆயிரத்து 250 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் கையிருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2,055 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 22 சதவீதம் மட்டுமே நிரம்பியுள்ளதாக மருத்துவமனைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 1055 படுக்கைகள் உள்ள நிலையில் 700 படுக்கைகள் நிரம்பியுள்ளதாகவும் போதுமான அளவு ஆக்சிஜன் கையிருப்பு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இஎஸ்ஐ மருத்துவமனையில் 3 நாட்களுக்கு தேவையான ஆக்சிஜன் கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 800 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து படுக்கைகளும் நிரம்பியுள்ளன. இந்நிலையில், கூடுதல் படுக்கைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் நெல்லையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 9 அரசு மருத்துவமனைகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், போதிய அளவு ஆக்சிஜன் கையிருப்பும் வைத்திருப்பதாகவும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் குமாரமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் தற்போது வரை 3 ஆயிரத்து 801 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சேலம் அரசு மருத்துவமனை மற்றும் மேட்டூர், ஓமலூர், ஆத்தூர் ஆகிய அரசு மருத்துவமனைகளிலும் கூடுதலாக படுக்கை வசதிகளை தயார் செய்ய மாவட்ட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள 550 ஆக்சிஜன் படுக்கைகள் முழுவதும் நிரம்பியதாகவும், கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் 120 படுக்கைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments