கொரோனா தடுப்பூசிகளை வீணாக்காமல் பயன்படுத்திய கேரள அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு

0 1109

கொரோனா தடுப்பூசி வீணாகாமல் பயன்படுத்தியதற்காக, கேரள அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட டிவிட்டர் பதிவுக்கு கருத்து தெரிவித்துள்ள பிரதமர், கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசி வீணாவதை குறைப்பது முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசிடம் இருந்து கேரளாவுக்கு 73 லட்சத்து 38 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு குப்பியிலும் வீணாக கூடிய நிலையில் இருக்கும் மருந்தையும் வீண் செய்யாமல் பயன்படுத்தி 74 லட்சத்து 26 ஆயிரம் டோஸ் போடப்பட்டுள்ளதாக பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார். இதற்காகவே மோடி கேரளாவை பாராட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments