மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் முழுமையாக ஒப்படைக்க வேண்டும் -மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

0 2818

கொரோனா தொற்று பரவலால் உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆக்சிஜன், படுக்கைகள், தடுப்பூசிகள் இருப்பு தேவைகளை ஒருங்கிணைக்க அவசரமாக கட்டளை மையம்’ ஒன்றை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளரிடம் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தனியார் மருத்துவமனைகள், 50 விழுக்காடு படுக்கைகளைத் தாண்டியும் கூடுதலாகவும் படுக்கைகளை ஒதுக்கீடு செய்ய அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசு மருத்துவமனைகளோடு சேர்ந்து தனியார் மருத்துவமனைகளும் துரிதமாகச் செயல்பட்டாக வேண்டும் என்றும், கட்டணத்திலும் முடிந்தளவு சலுகை காட்டுமாறும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments