வெற்றி கொண்டாட்டத்தை போலீசாரிடம் கூறியதால் ஆத்திரம்; அதிமுக பிரமுகரை தாக்கிய புகாரில் திமுக நிர்வாகி உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு

0 6090
வெற்றி கொண்டாட்டத்தை போலீசாரிடம் கூறியதால் ஆத்திரம்; அதிமுக பிரமுகரை தாக்கிய புகாரில் திமுக நிர்வாகி உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு

வெற்றி கொண்டாட்டத்தை போலீசாரிடம் கூறியதாக, அதிமுக பிரமுகரை தாக்கிய புகாரில் திமுக நிர்வாகி உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இனாம்குளத்தூர் அருகே உள்ள பெரிய ஆலம்பட்டி புதூரை சேர்ந்த பச்சமுத்து, அதிமுக கிளை செயலாளராக உள்ளார். இவரின் வீட்டருகே திமுக நிர்வாகி சார்லஸ் என்பவர் திமுக வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக தனது நண்பர்களுடன் பட்டாசு வெடித்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த இனாம்குளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சார்லஸின் நண்பரான இளையராஜா என்பவர், பச்சமுத்துவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நண்பர்களுடன் சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த பச்சமுத்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தப் புகார் குறித்து திமுக நிர்வாகிகள் உள்பட 8 பேர் மீது இனாம்குளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துன்னர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments