அரசு, தனியார் மருத்துவமனைகளில் தீ விபத்து நேரிடாமல் தடுக்க வேண்டும்; மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

0 687
அரசு, தனியார் மருத்துவமனைகளில் தீ விபத்து நேரிடாமல் தடுக்க வேண்டும்; மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீ விபத்து நிகழ்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை வார்டுகள் உள்பட அனைத்து பிரிவுகளில் தீ விபத்து நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்த திட்டம் வகுத்து செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீ தடுப்பு கருவிகள், தடையற்ற மின் விநியோகம் இருப்பதையும் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவமனைகளில் ஏற்பட்ட தீவிபத்தில் கொரோனா நோயாளிகள் சிலர் பலியானதை அடுத்து இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments