கொரோனா நெகட்டிவ் என்றாலும் உடல் உறுப்புகள் பாதிப்பால் மரணம்..! மயானங்களில் புதைக்கப்படும், எரிக்கப்படும் சடலங்கள் பல மடங்கு அதிகரிப்பு

0 11535
கொரோனா நெகட்டிவ் என்றாலும் உடல் உறுப்புகள் பாதிப்பால் மரணம்..! மயானங்களில் புதைக்கப்படும், எரிக்கப்படும் சடலங்கள் பல மடங்கு அதிகரிப்பு

கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் என்று அறிவிக்கப்படும் எண்ணிக்கையை விட, மயானத்தில் புதைக்கப்படும் அல்லது எரிக்கப்படும் சடலங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக உள்ளது.

கொரோனா பாதிப்பால் நுரையீரல், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. நோயாளிகளுக்கு சில நாட்களுக்குப் பின் கொரோனா நெகட்டிவ் என்று பரிசோதனையில் தெரிய வந்த போதிலும், உடல் உள் உறுப்புகளில் ஏற்பட்ட பாதிப்பு குறையாமல் பலர் மரணிக்கும் சூழலே தற்போது நிலவுகிறது.

குறிப்பாக ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் மே ஒன்றாம் தேதி வரையிலான 6 நாட்களில் கோவை மாவட்டத்தில் 13 பேர் கொரோனாவுக்கு பலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 200க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கு காரணம் கொரோனா பாசிடிவ் உடன் உயிரிழப்பவர்களை மட்டுமே கணக்கில் எடுத்து அரசு அறிவிக்கிறது. ஆனால் கொரோனா நெகடிவ் என்று வந்த பிறகு அதன் தாக்கத்தால் உடல் உறுப்புகள் செயல் இழந்து உயிரிழப்பவர்களை கொரோனாவால் பலியானவர்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.

இதனால் தான் மயானத்தில் புதைக்கப்படும் அல்லது எரிக்கப்படும் சடலங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments