தமிழகத்தில் முழு ஊரடங்கை அறிவிக்க கோரிய வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்விற்கு மாற்ற பரிந்துரை

0 2723

மிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கை அறிவிக்க கோரிய வழக்கை, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதே போன்று கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தமிழகம் முழுவதும் சித்தா மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவமனைகளை அமைக்க கோரிய வழக்கையும் தலைமை நீதிபதி அமர்வு முன் பட்டியலிட பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments