மராத்தா வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு செல்லாது -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

0 862

காராஷ்டிராவில் மாநில அரசு கொண்டு வந்த மராத்தா இட ஒதுக்கீடு அரசியலமைப்புக்கு விரோதமானது என்று கூறி உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மராத்தா வகுப்பினருக்கு என்று கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தனியாக இட ஒதுக்கீடு செய்தது, அரசியலமைப்பு பிரிவுகள் 14 மற்றும் 21 ஐ மீறுவதாகும் என நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான 5 நீதிபதிகள் அரசியலமைப்பு அமர்வு கூறியது.

50 சதவிகித இட ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில் அதை மீறுவதற்கான எந்த அசாதாரண சூழலும் நிலவவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிமன்ற அமர்வு ஏகோபித்த தீர்ப்பை வழங்கினாலும், இட ஒதுக்கீட்டை வழங்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு மட்டுமே உள்ளது என இரண்டு நீதிபதிகளும்,அதற்கான அதிகாரத்தை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்க கூடாது என்று வேறு 2 நீதிபதிகளும் கருத்து தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments