முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7 ஆம் தேதி பதவி ஏற்பு..!

0 3394
நாளை மறுநாள் காலை 9மணிக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சரவை பதவி ஏற்கும் விழா

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 7 ஆம் தேதி பதவி ஏற்கிறார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து, சென்னையில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற திமுக கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு பெற்றார். 133 எம்.எல்.ஏக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்ற மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். அப்போது அவர் சட்டமன்ற கட்சி தலைவராக எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை வழங்கி, ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரினார்.

இதை ஆளுநர் பன்வாரிலால் ஏற்றுக்கொண்டார். 7-ந்தேதி முதல்-அமைச்சராக பதவி ஏற்க விரும்புவதாகவும், ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு விழாவை வைத்துக் கொள்ளலாம் என்றும் ஸ்டாலின் விருப்பம் தெரிவித்தார். இதையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து தமிழகத்தில் ஆட்சியமைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்தார்.இதற்கான கடித த்தை ஆளுநரின் தனி செயலாளர் அனந்தராவ் பட்டேல் , ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலினின் இல்லத்திற்கு நேரில் சென்று வழங்கினார்.

7ந்தேதி நடக்கும் பதவியேற்பு விழா பற்றி 20 நிமிடம் மு.க.ஸ்டாலினிடம் அனந்தராவ் பட்டேல் பேசினார். இதையடுத்து தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின், 7 ஆம் தேதி காலை 9 மணிக்கு பதவியேற்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக் கொள்கிறது.

இதற்கான விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள திறந்த புல்வெளி மைதானத்தில் நடைபெறுகிறது. அங்கு சுமார் 200 பேர் அமரும் வகையில் பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெறுகிறது.

பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்பதால் விழாவில் பங்கேற்க வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments