மேற்கு வங்க முதலமைச்சராக 3வது முறையாக பதவி ஏற்றார் மம்தா பானர்ஜி

0 1583

மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து 3வது முறையாக மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் ஜக்தீப் தன்கர், மம்தாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநர், மாநிலத்தில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அமைச்சர்கள் வேறு யாரும் இன்று பதவியேற்கவில்லை. முதலமைச்சராக பதவியேற்ற மம்தாவுக்கு, பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments