இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,780 பேர் கொரானாவுக்கு பலி

0 3042

தொடர்ந்து 3 நாட்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று எண்ணிக்கை நேற்று அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 3லட்சத்து 82ஆயிரத்து 315 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில்  3,780  பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

சிகிச்சை முடிந்து   3 லட்சத்து 38 ஆயிரத்து 439 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வைரஸ் பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 87ஆயிரத்து 229 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 188 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை  16 கோடியே 4 லட்சத்து 94 ஆயிரத்து 188     பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments