மெக்சிகோவில் மெட்ரோ ரயில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து... 23 பேர் உயிரிழப்பு

0 2163

மெக்சிகோவின் மெட்ரோ ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 23 பேர் உயிரிழந்தனர்.

70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மெட்ரோ ரயில்  செல்ல அமைக்கப்பட்டிருந்த மேம்பாலம் திடீரென சரிந்து விழுந்ததில் பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த ரயில் கவிழ்ந்து பயணிகள் பலர் இடிபாடுகளில் சிக்கினர். கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான கார்களும் நசுங்கின.

தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments