பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

0 2738
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.

காலை 11 மணி அளவில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துவது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருந்துகள் இருப்பு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை முன்னிட்டு அதனைக்  கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments