மேற்குவங்க முதலமைச்சராக இன்று மூன்றாவது முறை பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி

0 2085
மேற்குவங்க முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி

மேற்குவங்க முதலமைச்சராக மூன்றாவது முறை மம்தா பானர்ஜி இன்று பதவியேற்கிறார்.

காலை 10.45 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மம்தா மட்டும் பதவியேற்பார் என்றும் அமைச்சர்கள் யாரும் பதவியேற்க மாட்டார்கள் என்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

பதவியேற்றதும் கோவிட் தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்க உள்ளார். இதர எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளையும் நாளை மறுநாளும் கோவிட் முன்னெச்சரிக்கைகளுடன் எளிய முறையில் பதவியேற்க உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments