செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை... 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த பரிதாபம்

0 19077

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 11 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்பு நேரிட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் நேற்றிரவு 10 மணி முதல் இந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அடுத்தடுத்து 4 நோயாளிகள் உயிரிழந்ததும், அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் இருந்து 3 மணி நேரத்திற்கு பிறகு ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு நிரப்பப்பட்டது. இதற்கிடையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.

நோயாளிகள் உயிரிழப்பு குறித்த தகவல்அறிந்ததும், மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் உடனடியாக மருத்துவமனைக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவமனையில் தேவையான ஆக்சிஜன் கையிருப்பில் இருந்த தாகவும், இந்த உயிரிழப்பு எதிர்பாராதவிதமாக நடந்துள்ளது என்றும் கூறினார். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments