உதவி செய்யுங்களேன் ப்ளீஸ்.. ’மை பிரதர் இஸ் நோ மோர்’ நடிகையின் உருக்கமான பதிவு!

0 100464

கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகை பியாவின் சகோதரர் சிகிச்சைக்கு பெட் கிடைக்காமல் உயிரிழந்துள்ளதையடுத்து, வலைத்தளவாசிகள் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வாழ்க்கை என்பது நிச்சயமற்றது என்பதை நாளுக்கு நாள் கொரோனா பாடம் எடுத்து வருகிறது. நேற்று உயிரோடு இருந்தவர்கள், இன்று நம்மோடு இல்லை. யார் எங்கே , எப்போது என்று தெரியாமல் கொத்து மண் குடிசைகளில் இருப்பவர்கள், மாட மாளிகைகளில் வசிப்பவர்கள் என்று யாராக இருந்தாலும் சரி தினமும் கொரோனாவால் மடிந்து கொண்டிருக்கின்றனர்.கொத்தாக உயிரிழந்து கொண்டிருக்கின்றனர்.

டெல்லி , மகாராஸ்டரா போன்ற மாநிலங்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது,. இதனால் மயானங்களில் ஹவுஸ் ஃபுல் போர்டு மாட்டி வைத்துள்ளனர்,. தகன மேடைகள் தத்தளித்து கொண்டிருக்கிறது மக்கள் செய்வதறியாது திகைத்து கொண்டிருக்கின்றனர்.

மண் குடிசைகளில் இருப்பவர்கள், மாட மாளிகைகளில் வசிப்பவர்கள் என்று யாராக இருந்தாலும் சரி தினமும் கொரோனாவால் மடிந்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் ஓ... மை காட். கே.வி.ஆனந்த் சார் இறந்துட்டாரா? என்னால நம்பவே முடியலை. யாராவது இது உண்மையான செய்தி அல்ல. வதந்தி என்று சொல்லுங்களேன்’ என்று ` நடிகை பியா பாஜ்பாய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதறியிருந்தார். தற்போது அதே பியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனது சகோதரர் இப்போது உயிரோடு இல்லை என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்,.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த பொய் சொல்ல போறோம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். அஜித்தின் 'ஏகன்', வெங்கட் பிரபுவின் 'கோவா' மற்றும் மறைந்த கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த 'கோ' என பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களில் நடித்திருந்தார்.

COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்ட பியா பாஜ்பாயின் சகோதரர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தார்,. இதனைதொடர்ந்து பியா , தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``என் சகோதரர் இறந்துகொண்டிருக்கிறார். அவருக்கு மருத்துவமனையில் ஒரு படுக்கையும் வென்டிலேட்டர் உதவியும் தேவை.

நாங்கள் உத்தரப்பிரதேசத்தில் இருக்கிற ஃபருகாபாத் நகரத்தில் காயம்கன்ஜ் பிளாக்கில் வசித்து வருகிறோம். நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறோம். யாராவது உதவி செய்யுங்களேன் ப்ளீஸ்’’ என்று கிட்டத்தட்ட 10 தடவை ட்வீட் செய்திருக்கிறார். ஆனால், பியாவிற்கு உதவி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது,.

இந்த நிலையில், 2 மணி நேரம் கழித்து, மை பிரதர் ஈஸ் நோ மோர் என்று பியா ட்விட் செய்துள்ளார்,. அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த நிமிடம் , ஆயிரக்கணக்கானோர் பியாவுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை பேர் ஆறுதல் சொன்னாலும், அவர் சகோதரனைக் காப்பாற்றச் செய்யப்பட்டிருக்க வேண்டிய ஓர் உதவிக்கு ஈடாகாது என்பது மட்டுமே மறுக்க முடியாத உண்மை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments